முக்கியச் செய்திகள் இந்தியா விளையாட்டு

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர்; தீபக் சாஹர் விலகல்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தீபக் சாஹருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கிடையே நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. இந்நிலையில் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியை தென்னாப்பிரிக்க அணி எதிர்கொண்டு வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் கடந்த அக்.6 ஆம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், ஒருநாள் தொடரைக் கைப்பற்ற, நாளை ராஞ்சியில் நடைபெற இருக்கும் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹருக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தீபக் சாஹர் விளையாட இயலாத சுழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளில் தீபக் சாஹருக்கு பதில் தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தர் விளையாடுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகிய தீபக் சாஹர், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இருந்தும் விலகுவாரா என பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள் எழுந்து வந்த நிலையில், லேசான காயமே ஏற்பட்டுள்ளதால் அவர் முழு உடல் தகுதியுடன் உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சசிகலாவின் சொத்துகளை முடக்குவதில் அரசியல் உள்நோக்கம் இல்லை: ஓ.எஸ்.மணியன்

Niruban Chakkaaravarthi

பெரியார் பல்கலையில் சாதி குறித்த கேள்வி: 3 பேர் கொண்ட குழு அமைப்பு

Web Editor

மதுரை ஆதீனம் அருணகிரி நாதரின் வாழ்க்கைப் பயணம்

G SaravanaKumar