நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாள நாட்டின் அதிபர் பித்யா தேவி பண்டாரி (வயது 61). இவர் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நேபாளத்தின் அதிபராக பதவியேற்றார். இவர் நேபாளத்தின் முதல் பெண் அதிபராவார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு நேற்று திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து அவரது செயலாளரான பேஷ் ராஜ் அதிகாரி செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு குளிர் ஜுரம், இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து, அவர் காத்மண்டுவில் உள்ள மகராஜ்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள திரிபுவன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.