மனைவியிடம் ஆபாசப் பேச்சு; தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய கும்பல் கைது

கேரளா மாநிலம் இடுக்கி அருகே மனைவியை ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளா மாநிலம் இடுக்கியிலுள்ள சுற்றுலா தளமான அஞ்சுருளி பகுதிக்கு பெரும்பாவூரைச் சேர்ந்த ரஜித்…

கேரளா மாநிலம் இடுக்கி அருகே மனைவியை ஆபாசமாக பேசியவர்களை தட்டிக்கேட்ட கணவரை தாக்கிய 14 பேரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் இடுக்கியிலுள்ள சுற்றுலா தளமான அஞ்சுருளி பகுதிக்கு பெரும்பாவூரைச் சேர்ந்த ரஜித் ராஜு, அவரது மனைவி கவிதா மற்றும் அவரது இரு குழந்தைகளுடன் வந்துள்ளார். அப்பொழுது கவிதாவிடம் ஒரு கும்பல் ஆபாசமாக பேசியும், செய்கையும் காட்டியுள்ளனர். இதனை அவரது கணவர் ரஜித் ராஜு தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரையும், மனைவி கவிதா மற்றும் இரு குழந்தைகளையும் அந்த கும்பல் தாக்கியது. இதைக் கண்ட அருகில் இருந்த கடைகாரர்கள் தடுக்க முற்பட்டபோது, அவர்களையும் அந்த கும்பல் தாக்கிவிட்டு இரண்டு வாகனங்களில் ஏறி அங்கிருந்து சென்றது. இதுகுறிந்து கடைக்காரர்கள் போலீசாருக்கும், அருகிலுள்ள காக்காடுகடை பகுதியில் உள்ளவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அப்பகுதி மக்கள் இரண்டு வாகனங்களையும் தடுத்தி நிறுத்தி கும்பலை மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார் வந்தவுடன் அவர்களிடம் ஒப்படைத்தனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வண்டமேடு மாலி பகுதியை சேர்ந்த பிரசாந்த், சபரி, பிரசாந்த், அஜித்குமார், விவிஷன், மனோஜ், சுதீஷ், அருண், விஜய், சதீஷ், சூர்யா, ரகு, அஜித்குமார் என்பது தெரியவந்தது.

இவர்கள் அனைவரும் கட்டப்பனையில் படம் பார்க்க வந்துள்ளனர். படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் இவர்கள் அஞ்சுருளிக்கு வந்தாக தெரிவித்தனர். அவர்கள் பயணித்த இரண்டு வாகனங்களும் போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்களின், கடந்த கால குற்றங்களை விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.