முக்கியச் செய்திகள் தமிழகம்

ஓபிசி இடஒதுக்கீடு வழக்கு: ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு 

ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆகஸ்ட் 25ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு பெற உரிமை உள்ளதாகவும், இடஒதுக்கீட்டை எப்படி வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழுவை அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, திமுக சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மத்திய அரசு இட ஒதுக்கீடு அமல்படுத்த முடியாது எனவும், 69 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனவும் திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பு வரும் 25-ஆம் தேதி வழங்கப்படும் என நீதிபதிகள் அறிவித்தனர்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த எவ்வளவு காலம் ஆகும்?

Saravana Kumar

விஜய் பிறந்தநாளில் “தளபதி 66” அறிவிப்பு?

வீட்டில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட போது நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!

Jeba Arul Robinson