ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் வாதங்களுக்கு கிடைத்த வெற்றி- ஓ.பி.எஸ் தரப்பு

அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி இது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்…

அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி இது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், “எங்கள் தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு ஜூன் 23க்கு முன் இருந்த நிலை தொடர வேண்டும் என்று தெளிவான உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதிமுக சட்ட விதிகளுக்கு கிடைத்த வெற்றி இது. ஓ.பன்னீர்செல்வத்தின் வாதங்களுக்கு கிடைத்த வெற்றி, மகத்தான தீர்ப்பு இது. இது அதிமுக மீண்டும் உயிர்பெற்று எழுந்து சிறப்பாக செயல்பட உதவும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற நிலையே நீடிக்கிறது. ஜூன் 23ம் தேதி கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது” என்று தெரிவித்தார்.

அதிமுகவை வழிநடத்தும் பொறுப்பு, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கே உள்ளது எனவும், இதில் எவ்வித சட்டசிக்கலும் இல்லை என்றும் குறிப்பிட்ட அவர், “இபிஎஸ் தரப்பு மேல்முறையீட்டுக்கு சென்றால் கேவியட் மனு தாக்கல் செய்வது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுப்பார். இரண்டு பேரும் இணைந்து பொதுக்குழுவை கூட்டுவதில் சிக்கல் எழுந்தால் அவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம். ஆணையர் ஒருவர் நியமிக்கப்பட்டு பொதுக்குழுவை நடத்தி தருவார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.