இலங்கை கிரிக்கெட் வீரருக்கு 6 வருடம் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும் பயிற்சியாளருமான நுவான் சோய்சாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 6 வருடம் தடை விதித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் நுவான் சோய்சா. இவர், இலங்கைக்காக 90…

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளரும் பயிற்சியாளருமான நுவான் சோய்சாவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 6 வருடம் தடை விதித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் நுவான் சோய்சா. இவர், இலங்கைக்காக 90 ஒரு நாள் போட்டிகளிலும் 30 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். பின்னர் இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டிருந்ததாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தியது. அதில், இந்திய புக்கி ஒருவர் அவரை தொடர்பு கொண்டதை ஐசிசியிடம் தெரிவிக்காதது, போட்டியின் முடிவை, முறையற்ற வகையில் மாற்றுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் அவர் மீது புகார் கூறப் பட்டிருந்தது.

இந்நிலையில் அவர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவருக்கு ஆறு வருடம் தடை விதித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முதல், இந்த தடை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.