குடியரசு தின விழாவுக்கு டெல்லி செல்லும் என்எஸ்எஸ் மாணவர்கள் விமானம் மூலம் அழைத்து செல்லப்படுவார்கள் : அமைச்சர் உதயநிதி

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு செல்லும் தமிழ்நாட்டு என்எஸ்எஸ் மாணவர்கள் இந்த ஆண்டு விமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவானர் அரங்கில் தமிழ் நாடு…

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்புக்கு செல்லும் தமிழ்நாட்டு என்எஸ்எஸ் மாணவர்கள் இந்த ஆண்டு விமானத்தில் அழைத்து செல்லப்படுவார்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கலைவானர் அரங்கில் தமிழ் நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக மாநில இளைஞர் திருவிழா-2023 நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது :

இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடு இந்தியா. இளைஞர்கள் அதிகமாக உள்ள மாநிலமும் தமிழ்நாடு உள்ளது. தமிழ் நாடு முற்போக்கு மாநிலமாகவும் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. எல்லா துறைகளிலும் பயணித்து அவர்களுக்கு பெரும் உதவிசெய்து வருபவர்கள் யார் என்று பார்த்தால் என்.எஸ்.எஸ் மாணவர்கள் தான். கொரோனா காலத்தில் மருத்துவ துறைக்கு என்.எஸ்.எஸ் மாணவர்கள் மிகவும் உதவி புரிந்துள்ளார்கள்

ரத்ததான முகாம் பற்றி முழுமையான விவரங்களை பெருமக்களிடையே கொண்டு சேர்த்தது NSS மாணவர்கள் நீங்கள் தான்.போதை இல்லாத மாநிலமாக நம் மாநிலத்தை மாற்ற போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை NSS மாணவர்கள் நீங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறீர்கள்.உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

1)கல்வி ஒன்றுதான் நம்மிடம் இருந்து யாராலும் பிரிக்க முடியாத ஒன்று. அந்த கல்வியில் நீங்கள் அதிக முக்கியதுவம் செலுத்த வேண்டும்.

2) சமூக வலைதளங்களில் மாணவர்கள் நீங்கள் அனைவரும் பயணித்து வருகின்றீர்கள். சமூக வலைதளங்களில் நீங்கள் ஒரு புகைப்படத்தை பார்க்கும் போது உங்கள் பகுத்தறிவு செயல்படுத்தி அந்த புகைப்படம் உண்மையா என்று பார்க்க வேண்டும்.

3) அப்பா,அம்மாவை தவிர யார் கேள்வி கேட்டாலும் அவர்களை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். சமூக வலைதளத்தை மாணவர்கள் நீங்கள் பார்த்து செயல்படுத்த வேண்டும்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயநிதி பேசினார். அவர் கூறியதாவது :

நான் கேட்டது இரண்டு கேள்விதான் அதிமுக, திமுக இணைத்து நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம் அவர்களை தயாராக வர சொல்லுங்கள். மேலும் பொதுமக்களும் வாருங்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை மேற்கொள்வோம். மாணவர்களின் உயிரில் அரசியல் செய்யாதீர்கள் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்தேன் என உதயநிதி கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.