அமலாக்கத் துறை – சிபிஐ ஆகியவற்றை கண்காணிக்கும் புதிய செயலாளர் அளவிலான பதவியை உருவாக்கி,சஞ்சய் குமார் மிஸ்ராவை புதிய சிஐஓவாக நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதாக அரசு கருதுவதாக வட்டாரங்கள் செய்திகள் வெளியாகியுள்ளன. அமலாக்கத்துறை பணமோசடி மற்றும் ஃபெமா மீறல்கள் தொடர்பான வழக்குகள் உட்பட நிதி மோசடியில் கவனம் செலுத்துகிறது, ஆனால் சிபிஐ ஊழல் மற்றும் பிற பொருளாதார குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கவனிக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிறுவனங்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை கொணடு வரும் வகையில், இரு துறைகளுக்கும் தலைமை தாங்கும் புதிய பதவியை உருவாக்கவுள்ளதாக தெரிகிறது. புதிய பதவி இந்திய அரசாங்கத்தின் செயலாளர் அந்தஸ்தில் இருக்கும். தற்போதைய தலைவர் சஞ்சய் மிஸ்ரா முதல் சிஐஓவாக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. செப்டம்பர் 15 ஆம் தேதி வரை அமலாக்கத்துறை தலைவராகத் தொடர அவருக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.
செப்டம்பர் 15 ஆம் தேதி மிஸ்ரா பதவி விலகுவதற்கு முன் சிஐஓ பதவி உருவாக்கப்படலாம் என்று மத்திய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழும், பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகத்தின் கீழ் சிபிஐயின் கீழும் ED தொடர்ந்து செயல்படும் என்று கூறப்படுகிறது. . இருப்பினும், இரண்டு ஏஜென்சிகளின் செயல்பாட்டுக் கண்காணிப்பு CIO க்கு மாற்றப்படும். புதிய சிஐஓ, பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கைகளை அளிப்பார் என்று கூறப்பட்டுள்ளது