விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு!

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.   நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன்…

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.  

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.  ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.  தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து,  வேட்பாளர்களை அறிவித்து,  தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில்,  தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.  இதனிடையே, விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி (71) நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் காலமானார்.  இந்த நிலையில்,  விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.