வேலை செய்யாத அடிபம்பு-அரை மணி நேரத்தில் சரிசெய்த அதிகாரிகள்!

வேலூர் மாவட்டத்தில் அடிபம்பு குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வைரலான நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில் அதை அதிகாரிகள் சரி செய்தனர். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது.…

வேலூர் மாவட்டத்தில் அடிபம்பு குறித்து சமூக வலைதளங்களில் செய்தி வைரலான நிலையில் அடுத்த அரை மணி நேரத்தில் அதை அதிகாரிகள் சரி செய்தனர்.

வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகிறது. கடந்த மாதம் டூவீலரை அகற்றாமல் போடப்பட்ட சாலை. ஜீப்பை அகற்றாமல் போடப்பட்டிருந்த சாலை என வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில், சத்துவாச்சாரி விஜயராகவபுரம் இரண்டாவது தெருவில் பயன்பாட்டில்
இருந்த அடி பம்பை அகற்றாமலேயே அப்படியே புதைத்தவாறு கால்வாய் கட்டப்பட்டுள்ள
சம்பவம் மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.


இது குறித்து சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி
உடனடியாக அடிப்பம்ப்பை கழற்றி சரிசெய்து வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நிதி கணக்கு காட்டுவதற்கு மட்டுமே நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.