பழங்குடி மக்களின் பொருட்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை: மக்கள் வேதனை

அழிவின் விளிம்பில் இருக்கும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நீலகிரி பழங்குடி மக்கள். நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள்…

அழிவின் விளிம்பில் இருக்கும் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் நீலகிரி பழங்குடி மக்கள்.

நீலகிரி மாவட்டத்தில் இருளர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், தோடர், கோத்தர் உள்ளிட்ட ஆறு வகையான பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். கோத்தகிரியில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கை எழில் கொஞ்சும் மலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ளது செம்மனாரை கிராமம்.

இங்கு இருளர், குரும்பர் பழங்குடி இனத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள இளைஞர்கள், இயற்கையில் கிடைக்கக்கூடிய மூங்கில் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, இசைக்கருவிகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அலங்காரப் பொருட்களை செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்தி: வனத்துறையினருக்கு போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது

சாதாரணமாகவே கைவினை பொருட்களுக்கும், இயற்கை பொருட்களுக்கும் மார்க்கெட்டில் விலை அதிகம் என்றாலும், இதுபோன்ற பழங்குடி மக்கள் செய்யும் பொருட்களுக்கு, சந்தையில் உரிய விலை கிடைப்பதில்லை என்பதே, மக்களின் கருத்தாக உள்ளது. கைவினை பொருட்களை சந்தைப்படுத்தி, நேரடியாக வருமானம் ஈட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செம்மனாரை பழங்குடி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.