திருப்பூரில், வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே பாப்பாங்குளம் சோளக் காட்டில் கடந்த 24-ஆம் தேதி பதுங்கி இருந்த சிறுத்தை, 2 விவசாயிகள் உள்பட 5 பேரை தாக்கியது. இதனால், அந்த கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, வனத்துறையினர் தானியங்கி கேமராக்கள் மற்றும் கூண்டுகள் அமைத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், சோளக்காட்டில் இருந்து தப்பிய சிறுத்தை சிக்காமல் தொடர்ந்து போக்கு காட்டி வந்தது. இந்நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
https://twitter.com/news7tamil/status/1486644860182401025
அண்மைச் செய்தி: கோவை – மைசூரு – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை?
இன்று திருப்பூர் அம்மாபாளையத்தில் புகுந்த சிறுத்தைக்கு 2 டோஸ் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தையை, வனத்துறையினர் தற்போது மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








