தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள்…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. தற்போது சில நாட்களாக சில இடங்களில் மட்டுமே லேசான மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள வீடியோவில், கேரள கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறைவும் என்றும், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கம் மற்றும் தண்டரம்பேட்டை பகுதிகளில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவானதாகவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.