ரஷ்யாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், அந்த நாட்டின் போா் விமான தயாரிப்பு ஆலையை பாா்வையிட்டாா்.
வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் ரஷ்யாவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் புடினை சந்தித்த அவர், ரஷ்யாவின் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார். இதனைத் தொடர்நது ரஷ்யாவின் ராணுவ தளவாடங்களை அவர் பார்வையிட்டு வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வடகொரியா – ரஷ்யா இடையே ராணுவ தளவாடங்கள் பரிமாற்றம் நடைபெறும் என சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு அமெரிக்கா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு வருகின்றன.
இந்நிலையில், கொசோமோல்ஸ்க்-ஆன்-அமூா் நகரிலுள்ள போா் விமானத் தொழிற்சாலையை கிம் ஜோங்-உன் நேற்று நேரில் பாாவையிட்டாா. அவருடன், ரஷ்ய துணைப் பிரதமா்டெனிஸ் மான்டுரொவும் சென்று தளவாடங்கள் குறித்து விவரித்தார்.
அந்த ஆலையில், எஸ்யு-35 ரக சண்டை விமானமொன்றின் செயல் விளக்கம் கிம் ஜோங்-உன்-னுக்கு காட்டப்பட்டது. இது தவிர, சுகோய் எஸ்ஜே-100 பயணிகள் விமானத் தயாரிப்பு ஆலையையும் கிம் ஜோங்-உன் பாாவையிட்டாா்
உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் Tu-160, Tu-95, Tu-22 ஆகிய விமானங்களையும் அவர் பார்வையிட்டார். இந்த விமானங்கள் தற்போது உக்ரைன் மீது ஏவுகணைகளை வீச பயன்படுத்தப்படுகிறது.
அடுத்ததாக ரஷ்யாவின் கடற்படைக்கு கிம் ஜாங் செல்ல உள்ளதாக கூறுப்படுகிறது. தெரிகிறது. இதில் இருந்து இரு நாடுகள் இடையே ஆயுதங்கள் பரிமாற்றம் நடக்க வாய்ப்புள்ளதும் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது
உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத கையிருப்பு ரஷ்யாவிடம் குறைந்து வருவதாலும், பொருளாதாரத் தடைகள் காரணமாக அவற்றை பிற நாடுகளிலிருந்து வாங்க முடியாததாலும் வட கொரியாவிடமிருந்து ஏவுகணைகள் மற்றும் விமான எதிா்ப்பு எறிகணைகளை வாங்க ரஷியா திட்டமிட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.