விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான ‘மார்க் ஆண்டனி’ படம் முதல் நாளில் ரூ. 7 முதல் 9 கோடிவரை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’ டைம் டிராவல் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கு முன்பு வெளியான விஷால் படங்களின் முதல் நாள் வசூலை இந்தப் படம் முறியடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சுமார் ரூ.40 கோடி பட்ஜெட்டில் தயாரான மார்க் ஆண்டனி முதல் நாளில் ரூ. 7 முதல் 9 கோடிவரை வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரசிகர்களிடம் நல்ல விமர்சனம் உள்ளதால் தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுதினம் விடுமுறை நாட்கள் என்பதால் படம் வசூலில் ஜொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.