முக்கியச் செய்திகள் இந்தியா

அக்னிபாத் திட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது: ராணுவம்

அக்னிபாத் திட்டம் திரும்பப்பெறப்பட மாட்டாது என்று அந்த திட்டத்திற்கான கூடுதல் செயலர் அனில் பூரி தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம் குறித்து விளக்கம்:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றதன் காரணமாக, அந்த திட்டம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக அக்னிவீர் திட்டத்திற்கான பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் அனில் பூரி, விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா, கப்பற்படையினர் வைஸ் அட்மிரல் தினேஷ் திருபதி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

இது நீண்டகாலமாக நிறைவேறாத சீர்திருத்தம்:

அப்போது, நீண்ட காலமாக செயல்படுத்தப்படாமல் இருந்த சீர்திருத்தத்தையே தற்போது செயல்படுத்த உள்ளதாக அனில் பூரி தெரிவித்தார். பணியிடங்களில் அக்னிவீரர்களுக்குப் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என கூறிய அவர், வழக்கமான முறையில் பணிக்குச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அதே சலுகைககள் அக்னிவீரர்களுக்கும் வழங்கப்படும் என்றார்.

உயிரிழக்க நேரிட்டால் குடும்பத்துக்கு ரூ.1கோடி:

பணியின்போது அக்னிவீரர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

வரும்காலங்களில் ஆண்டுக்கு 1.25 பேர் வரை தேர்வு:

தற்போது 46 ஆயிரம் பேர் அக்னிவீரர்களாக தேர்வு செய்யப்பட இருப்பது குறைந்த எண்ணிக்கை என்று குறிப்பிட்ட அனில் பூரி, இது பரிசோதனைக் காலம் என்பதால் இவ்வளவு குறைவாக தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தெரிவித்தார். இந்த எண்ணிக்கை அடுத்த 4-5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 1.25 லட்சமாக உயரும் என அவர் கூறினார்.

அக்னிவீரர்களாக பணியாற்றிவிட்டு ஓய்வு பெறுபவர்களுக்கு மற்ற அரசு துறை பணிகளில் முன்னுரிமை அளிப்பது என்பது ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுதான் என்று தெரிவித்த அனில் பூரி, போராட்டம் காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றார்.

வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு வாய்ப்பு இல்லை:

இந்திய ராணுவத்தின் அடித்தளம் ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என குறிப்பிட்ட அனில் பூரி, வன்முறை போராட்டங்களில் பங்கேற்றவர்கள் அக்னிவீரர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள் என்றார். விண்ணப்பதாரர்களுக்கு எதிராக காவல்நிலையங்களில் வழக்கு பதிவாகி இருந்தால் அவர்கள் தகுதி அற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என அனில் பூரி தெரிவித்தார்.

விண்ணப்ப படிவத்தில் வன்முறை போராட்டங்களில் பங்கேற்கவில்லை என உறுதி அளிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தப்படும் என்றும் அக்னிபாத் திட்டத்திற்கான பாதுகாப்புத் துறை கூடுதல் செயலர் அனில் பூரி தெரிவித்துள்ளார்.

அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது:

அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என அறிவித்த அனில் பூரி, திட்டமிட்டபடி இந்த ஆண்டு டிசம்பருக்குள் முதல் பேட்ஜ் அக்னிவீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றார்.

பதிவு வரும் 24ம் தேதி தொடங்கும்:

அக்னிபாத் திட்டம் குறித்து பேசிய விமானப்படையின் ஏர் மார்ஷல் எஸ்.கே. ஜா, அக்னிவீரர் பணிக்கான பதிவு வரும் 24ம் தேதி தொடங்கும் என்றார். ஜூலை 24ம் தேதிக்குள் முதல் பேட்ஜ் வீரர்களுக்கான ஆன்லைன் தேர்வு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேர்வு செய்யப்படும் அக்னிவீரர்களுக்கு டிசம்பர் 30க்குள் பயிற்சி தொடங்கப்பட்டுவிடும் என்றும் எஸ்.கே. ஜா தெரிவித்தார்.

பயிற்சி நவம்பர் 21ம் தேதி முதல் தொடங்கும்:

கப்பற்படை அக்னிவீரர்களுக்கான பயிற்சி இந்த ஆண்டு நவம்பர் 21ம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்காவில் பயிற்சி வழங்கப்படும் என்றும் கப்பற்படை வைஸ் அட்மிரல் தினேஷ் திருப்பதி தெரிவித்துள்ளார். ஆண்கள் மற்றும் பெண்கள் இதற்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பெண் வீரர்களும் போர் கப்பல்களில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் வைஸ் அட்மிரல் தினேஷ் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசுத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர்

Ezhilarasan

விஜய் ஜோடியாக நடிக்கிறாரா? கீர்த்தி சுரேஷ் பரபரப்பு

Ezhilarasan

செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு; வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Halley Karthik