வார இறுதி நாட்களில் வழிபாட்டு தளங்களுக்குச் செல்ல அனுமதி கிடையாது: அமைச்சர் சேகர் பாபு

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடையாது என்பதில் மாற்றமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள…

வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் பக்தர்கள் வழிபாட்டு தளங்களுக்குச் சென்று வழிபட அனுமதி கிடையாது என்பதில் மாற்றமில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ எவர்ட் பள்ளியில், 15 முதல் 18 வயதினருக்கான கோவிட் தடுப்பூசி போடும் முகாமினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் 92% மக்கள் முதல் தவணை தடுப்பூசியையும், 71% மக்கள் இரண்டாம் தவணை தடுப்பூசியையும் போட்டுக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

இதனால், தற்போது கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அதனால் உயிர்பலி பெரிய அளவில் இல்லை என்ற நிலை உள்ளதாகக் கூறினார். இந்தியாவிலேயே தடுப்பூசி செலுத்துவதில் சென்னை மாநகராட்சி தான் முதல் இடத்தில் உள்ளது என்றும் சேகர் பாபு குறிப்பிட்டார். 3 ஆம் அலையை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து வருவதாகவும் சேகர்பாபு தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.