ஓ. பன்னீர்செல்வம் பக்கம் யாரும் இல்லை எடப்பாடி பழனிசாமி பக்கம் தான் எல்லாரும் இருக்கிறார்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அருகே படப்பையில் உள்ள தனியார் திருமண
மண்டபத்தில் குன்றத்தூர் ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மற்றும்
பொங்கல் திருநாளை முன்னிட்டு நிர்வாகிகளுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகத் தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்
நிறுவனங்களின் துறை அமைச்சர் அன்பரசன் கலந்துகொண்டு 1500 திமுக
நிர்வாகிகளுக்குப் பொங்கல் தொகுப்பு வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது மேடையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மறைந்த பிறகு நினைவு நாளின் போது அவர்களது நினைவிடத்தில் ஆறு ஏழு பேர் தனி தனியாக மாலை அணிவித்தனர். நீங்களே பார்த்து இருப்பீர்கள் சசிகலா, தினகரன், வளர்ப்பு மகன் , எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் என அனைவரும் தனித் தனியாகச் சென்றனர் பேசினார்.
ஓ பன்னீர்செல்வம் பக்கம் யாரும் இல்லை ஊருக்கு ஒருத்தர் தான் இருக்கிறார்கள். போஸ்டர் அடிச்சி ஒட்டுவதற்கே தான் இருக்கிறார்கள். கட்சி ஒன்றாக இருப்பது எடப்பாடி பழனிசாமி பக்கம், மட்டும் தான். ஓ பன்னீர்செல்வம் பக்கம் போனா கட்சியில் இல்லாமல் போய் விடுவோம். இருக்கிற இடத்தில் இருப்போம் என இருக்கிறார்கள் என அவர் பேசினார்.







