“பொய் வழக்குகளை தாண்டி நிற்போம்” – கனிமொழி பேட்டி!

தவறு நடந்ததற்காக நடவடிக்கை எடுக்கவில்லை பழிவாங்கும் நோக்கில் ரைடு நடத்துகிறார்கள் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

மதுரை திருப்பரங்குன்றம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் ல;அந்துகொண்ட திமுக எம்.பி கனிமொழி மணமக்களை வாழ்த்தினார் தொடர்ந்து அவர் விழா மேடையில் பேசும்போது:

வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி அவர்கள் ஏன் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பது உங்களுக்கு தெரியும் இப்போது இருக்கும் அரசு திமுகவை மிரட்டி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். எத்தனை வழக்குகள் எத்தனை ரெய்டு என மிரட்டி கொண்டிருக்கிறார்கள் இதற்கெல்லாம் பயப்படாத இயக்கம் திமுக. எதையும் எதிர் கொண்டு எத்தனையோ கடந்து வந்திருக்கிறோம் அதனால் இதையும் நாங்கள் திட்டம் என கடந்து போவோம் என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசும் போது: திராவிட முன்னேற்றக் கழகத்தை பழிவாங்க கூடிய வகையில் எல்லா முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போட்டு அவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திரும்பத் திரும்ப பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்தி விடலாம், அவர்களை விமர்சிக்காமல் நிறுத்தி விடலாம் என்ற நினைப்பில் திரும்பத் திரும்ப இதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.நிச்சயமாக திராவிட முன்னேற்ற கழகம் எத்தனையோ சோதனைகளை கடந்து வந்த இயக்கம் இதில் இருக்கக்கூடிய யாரும் பயப்பட கூடியவர்கள் அல்ல, எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று தாண்டி நிற்போம். தவறு நடந்ததற்காக நடவடிக்கை எடுக்கவில்லை பழிவாங்கக் கூடிய வகையில் ரைடு நடத்துகிறார்கள்.

இவர்கள் பக்கம் பெண்கள் மீதான குற்றங்கள் குழந்தைகள் காணாமல் போவது எத்தனையோ கொலைகள் கொள்ளைகள் நடந்து கொண்டிருக்கிறது இதில் இரண்டு முறை போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது ஒன்றில் தவெக நிர்வாகி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார் இப்போது 140 கிலோ போதை பொருள் கைப்பற்றப்பட்டிருக்கிறது ஆனால் எதற்கும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை இதில் தமிழக வெற்றி கழகத்தினர் பலபேர் பெண்களுக்கு எதிரான குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம் சபாநாயகரே ஒருவரை தாக்கும் அளவில் சம்பவம் நடைபெறுகிறது இவ்வளவு நடக்கக்கூடிய இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாயை திறக்காமல் நேரடியாக காவல்துறையை தன் கையில் வைத்துக் கொண்டிருக்கும் முதலமைச்சரை வேறு யாரும் பார்த்திருக்க முடியாது” என்றார்

திமுக ஆட்சியில் குற்றங்கள் நடைபெற்றுள்ளது என அமைச்சர்கள் பேசி வருவது குறித்த கேள்விக்கு, இதைவிட மோசமான பதில் வேறு எங்கும் பார்க்க முடியாது முதலீடு வருவதை கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் அதிகம் உள்ளது என பேசலாம் ஆனால் குற்றங்கள் நடைபெற்றது கடந்த ஆட்சியிலும் அதிகம் நடைபெற்றது என பேசுவது தவறு திமுக ஆட்சி காலத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்ட அப்போதைய முதல்வரை சாரி சொல்ல வேண்டாம் எனக் கூறிய முதல்வர் சாரி கூட சொல்ல முடியாத ஒரு நிலையில் இருக்கிறார்” என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.