தலைகவசம் அணியாமல் பயணிப்பவர்களுக்கு இனி அபராதம் – கோவை மாநகர காவல்துறை அதிரடி!

கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மேட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் தெரிவித்துள்ளார். கோவை, மாநகரில்…

கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து ஹெல்மேட் இல்லாமல் பயணிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை ஓரிரு நாளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் தெரிவித்துள்ளார்.

கோவை, மாநகரில் நாளுக்கு நாள் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மாநகர காவல் துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்கள் கண்டிப்பாக தலை கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்வோரும் தலைக் கவசம் அணிவது கட்டாயம் என்ற நடைமுறையை மாநகர போலீசார் கடந்த 26-ஆம் தேதி அன்று அமல்படுத்தினர்.

இந்த நிலையில், கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையர் மதிவாணன் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது ;

கோவையில் இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவர்களுக்கும் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற நடைமுறை கடந்த திங்கள் முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்னும் ஒரிரு நாட்களில் அபராதம் விதிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.

கடந்த இரண்டு நாட்களாக தலைகவசம் அணியாமல் பயணித்தவர்களுக்கு அறிவுறையும், விழிப்புணர்வு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இருசக்கர வாகன விபத்தில், பின்னால் அமர்ந்து சென்றவர்களே விபத்தில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்று சாலை விபத்தில் பலியானவர்களில், 2022 ஆம் ஆண்டு 18 பேரும், 2023 தற்போது வரை 7 பேரும் ஆவர். இதில் பெண்களே அதிமாக உள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.