டி.டி.வி தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை கைப்பற்ற முடியாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் தெரிவித்துள்ளார்.
தற்போது 5-வது கட்ட தேர்தல் பரப்புரையில், ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார். ஆம்பூர் பரப்புரையில் பேசிய அவர், மாணவ, மாணவியருக்கு தேவையான அனைத்தையும், அரசு வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருவதாக குறிப்பிட்டார். அதிமுக சாதி, மதம் சாராத கட்சி என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எத்தனை அவதாரம் எடுத்தாலும் டி.டி.வி. தினகரனால் அதிமுகவை கைப்பற்ற முடியாது என தெரிவித்தார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சதி திட்டம் தீட்டி வருகின்றனர் என்றும், ஒரு போதும் அவர்களை அதிமுகவில் இணைக்க முடியாது என்றும் அவர் பேசினார்.
ஒரு குடும்பத்தினர் அதிமுகவை ஆள்வதற்கு இனியும் வாய்ப்பில்லை என குறிப்பிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் அடிமட்ட தொண்டன் தான் இனி அதிமுகவில் முதல்வர ஆக முடியும் என்றும் தெரிவித்தார்.







