புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லாத நிலையில் அரசு உள்ளது, மாநில வருவாயினை உயர்த்தி நிர்வாகத்தை சமாளித்து வருகின்றேன் என சட்டப் பேரவையில் உறுப்பினர்கள் கேள்விக்கு முதல்வர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட்கூட்டத்தொடரின் மானியக்கோரிக்கை மீது
உறுப்பினர்களின் விவாதம் மற்றும் உறுப்பினர்களின் கேள்விக்கு சம்பந்தப்பட்ட துறை ரீதியான அமைச்சர்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் ரங்கசாமி கடந்த கால
ஆட்சியின் தவறான நிர்வாக நடவடிக்கையால் புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1,250 கோடியை செலவிடுவதில் தாமதம்
ஏற்படுவதாக பேரவையில் தெரிவித்தார்.
இதனையும் படியுங்கள்: 5 வருட சம்பளம் போனஸ்! – ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்!!
முடிந்தவரை ஒதுக்கப்பட்ட நிதியை செலவிட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அவர் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் அரசின் சில முடிவுகள் எடுக்கும்போது அதிகாரி ஒத்துழைப்பு அளிப்பதில்லை என வேதனையுடன் பேசினார்.
மேலும் உறுப்பினர்கள் எல்லா கோரிக்கைகளையும் முன் வைக்கின்றீர்கள்,
புதுச்சேரிக்கு முழு அதிகாரம் இல்லாத நிலையில் புதுச்சேரி அரசு உள்ளது. இதை
உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவர் மாநில சொந்த வருவாயினை
உயர்த்தி வருவதால் மாநில நிர்வாகத்தை சமாளித்து வருகின்றேன் என பேரவையில்
பதிலளித்துள்ளார்.