தி வீக்ண்ட் உலகின் மிகவும் பிரபலமான கலைஞராக அதிகாரப்பூர்வமாக கின்னஸ் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வீக்எண்ட் என அறியப்படும் 33 வயதான கனடியன் இசைக்கலைஞரான Abel Tesfaye, இரண்டு புதிய கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளார். வீக்எண்டானது Spotifyல் 2 புதிய சாதனைகளை முறியடித்துள்ளது. ஒன்று ‘ஸ்பாட்டிஃபை’ வரலாற்றில் 111 மில்லியனைத் தாண்டியதன் மூலம் மாதாந்திர பாடல் கேட்கப்பட்ட எண்ணிக்கை, மற்றும் மொத்தமாக வீக்எண்ட் பக்கம் 100-மில்லியன் மாதாந்திரக் கேட்போர் எண்ணிக்கையைத் தாண்டிய முதல் ’ஸ்பாட்டிஃபை’ ப்ரொஃபைல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுமட்டுமில்லாமல் தி வீக்ண்டின் 2020 டிராக் பிளைண்டிங் லைட்ஸ் ஸ்பாட்டிஃபையில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட டிராக்காகும். இந்த பாடல் திங்கள்கிழமை நிலவரப்படி 3.47 பில்லியினுக்கும் அதிகமானோர் கேட்டுள்ளனர். தி வீக்ண்டின் ஸ்ட்ரீமிங் சாதனையை யாரும் அறுகில் கூட நெருங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷகிரா 81.6 மில்லியன் கேட்பவர்களுடன் இரண்டாவதாக உள்ளார். அரியானா கிராண்டே 80.6 மில்லியன் கேட்பவர்களுடன், டெய்லர் ஸ்விஃப்ட் 80.2 மில்லியன் கேட்பவர்களுடன் மற்றும் ரிஹானா 78.5 மில்லியன் கேட்பவர்களுடன் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர்.