கரையில் வைத்துள்ள குளிர்சாதன பெட்டியை முதலை தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
சுற்றுலா சென்றுள்ள சிலர் உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் அடங்கிய குளிர்சாதன பெட்டியை கரையில் வைத்துள்ளனர். தண்ணீருக்குள் இருந்த முதலை திடீரென வெளியில் வந்து அந்த குளிர்சாதன பெட்டியை கவ்வுகிறது. பிறகு அந்தப் பெட்டியை தண்ணீருக்குள் இழுத்துச் செல்கிறது. இந்த சம்பவத்தை அங்கு சுற்றுலா வந்த நபர்கள் படம் பிடித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வீடியோ முடிவில் இன்னொரு முதலையும் சேர்ந்துகொண்டு அந்த குளிர்சாதன பெட்டியை தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது. இந்த வீடியோ தற்போது 1.67 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளது.