அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் மீது தகுதிநீக்க நடவடிக்கை இல்லை – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிப்பு!

அதிமுகவின் 21 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் இல்லை என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக உறுப்பினர்கள் 25 பேரை தகுதிநீக்கம் செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, அவரிடம் இருந்து 4 கடிதங்கள் வந்துள்ளது. அதன்பின்னர், 21 உறுப்பினர்கள் அளித்த விளக்கத்தை ஏற்று, அவர்களை மன்னித்து விடுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதையடுத்து அவர் வழங்கிய 4 கடிதங்களை முறையாக ஆய்வு செய்தேன். எடப்பாடி பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தபடி, உறுப்பினர்களின் மன்னிப்பு கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடுகிறேன். எஞ்சிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரியிருந்தார். அதன்படி, உறுப்பினர்கள் எஸ்.ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா மீது நடவடிக்கை தொடங்கிவிட்டது. என்ன நடவடிக்கை என்பது பிறகு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.