விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் வகுப்புகள் கூடாது-அமைச்சர் அன்பில் மகேஸ் எச்சரிக்கை

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கூடுதல் பயணியர் சுற்றுலா மாளிகையில் பள்ளி…

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வகுப்புகள்
நடத்த வேண்டாம் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள கூடுதல் பயணியர் சுற்றுலா மாளிகையில் பள்ளி
கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச வேண்டாம்.
சுதந்திரமாக செயல்பட விடுங்கள். தமிழகத்தில் 100,31பள்ளிகள் இடியும் நிலையில் உள்ள பள்ளிகளை இடித்து புதிய கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் இதற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முதல்வர் தலைமையில் விரைவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்
நாட்டப்படவுள்ளது. மேலும் பேராசிரியர் அன்பழகன் அறக்கட்டளை சார்பில் முதல்கட்டமாக மரத்தடியில் பாடம் படிக்கும் 2500 பள்ளி கட்டிடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உடனடி
நடவடிக்கையாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு அருகே உள்ள கல்லூரியில் நேரடி வகுப்பு நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுவுள்ளது.

இதுதவிர அந்த பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் தமிழகத்தில் எந்த பகுதியில்
உள்ள பள்ளிகளிலும் சேர விரும்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கவுன்சிலிங் 3 மாதத்திற்கு ஒரு முறை
கொடுக்க அறிவுறுத்தி உள்ளாேம். விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளித்திடும்
வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்களுக்கு
மாநில, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் செலவை அரசே ஏற்று நடத்திட முடிவு
செய்து உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

காலை சிற்றுண்டி குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த
திட்டம் துவங்குவது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார். கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களிடம் பணம் வசூலிப்பது தெரியவந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள் விளையாட்டுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்குவது அரசின் எண்ணமாக இருந்து வருகிறது. மடிக்கணினியை உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டதன் காரணமாக மடிக்கணினி வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் விடுமுறை நாட்களில் பள்ளிகளின் நடத்த வேண்டாம் என்று பள்ளிகளுக்கு அரசு சார்பில் தெரிவித்து வருகிறோம். சில பெற்றோர்கள் விடுமுறை நாட்களிலும் பள்ளிகள் நடத்த வேண்டும் என்று ஆசிரியர்களிடம் தெரிவிப்பதாக கூறுகின்றனர்.

வீட்டிலிருந்து வீட்டுப்பாடம் உள்ளிட்டவர்களை மேற்கொள்ளட்டும். பெற்றோர்கள்
குழந்தைகளுக்கு அதிகம் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றார். தனியார் பள்ளி
சார்ந்தவர்கள் விடுமுறை நாட்களில் மாணவர்கள் புத்துணர்ச்சி செய்து கொள்வதற்கான
நாட்கள். அதற்கான நாளில் அழுத்தம் கொடுக்கும்படி வகுப்புகள் நடத்த வேண்டாம்
என்றார் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.