ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!

வங்கிகளுக்கு கடன் வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தை அவ்வப்போது ரிசர்வ் வங்கியின் நிதிக்குழு கூட்டம் கூடி , ரெப்போ வட்டி விகிதம் குறித்து முக்கிய முடிவுகளை எடுக்கும்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட்டி வகிதம் 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டு வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று வங்கிகளின் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

கடந்த 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகளில் கடன் பெற்றுள்ள வீட்டுக் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றுக்கான வட்டி விகிதம் தற்போது நடைமுறையில் உள்ள வட்டி விகிதமே தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.