கேரளாவில் நிபா வைரஸால் மேலும் ஒருவர் பாதிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி கோழிக்கோடு மாவட்டத்தில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழந்தார். இதேபோல் செப். 11 தேதி மற்றொருவர் பலியானார். அவர்களின் மாதிரிகள் புனே ஆய்வகத்துக்கு சோதனைக்காக அனுப்பப்பட்டது. அதில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்த மருத்துவமனை ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் தனிமையில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த 39 வயது நபர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனையடுத்து கோழிக்கோட்டில் மக்கள் வெளியே நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.







