திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த நைஜீரியர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், வடமாநிலத்தை
சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நைஜீரியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களும்,
தங்கி பின்னலாடை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மேலும், திருப்பூரில்
பெரும்பாலான நைஜீரியர்கள், ராயபுரம் வெத்திசெட்டிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்
தங்கி உள்ளனர்.
இதில் ஒரு சிலர் நைஜீரியர்கள் உரிய ஆவணங்கள் இன்றியும், காலாவதியான ஆவணங்களை வைத்துக் கொண்டும் திருப்பூரிலேயே குடியிருந்து வருகின்றனர். இது போல் தங்கி உள்ள நைஜீரியர்களை , காவலர்கள் அவ்வப்போது சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி தங்கி உள்ள நைஜீரியர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் ராயபுரத்தில் நைஜீரியர்கள் தங்கி இருந்த பகுதியில், காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது நைஜீரியர்கள் நான்கு பேர், உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்தது தெரியவந்தது . இதை அடுத்து காவலாகள் முறைகேடாக தங்கியிருந்த ரிச்சர்ட் உபா, அஃபாம் பாஸ்கல், ஜான்பால் மற்றம் ஒபின்னா ஆகிய நான்கு பேரை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
—கு.பாலமுருகன்







