நைஜீரிய சமையல்காரர் ஒருவர் 100 மணி நேரம் சமைத்து, அதிக நேரம் இடைவிடாது சமைத்ததற்கான புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
நீண்டநேரம் சமைத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் நைஜீரியாவை சேர்ந்த 27 வயதான ஹில்டா பாஸி. நைஜீரியாவின் லாகோஸ் மாநிலத்தில் உள்ள லெக்கியில் உள்ள அமோர் கார்டன்ஸில் இந்த நிகழ்வு நடந்தது.
மே 11 மற்றும் 15ஆம் தேதிக்கு இடையில் 100 மணிநேரம் இடைவிடாமல் சமைத்த பாசி, 2019 இல் இந்தியாவின், செஃப் லதாவின் 87 மணிநேரம், 45 நிமிட சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தச் சாதனையைப் படைக்க அவர், ஏப்ரல் 12-13 வரை 24 மணி நேர சோதனை முயற்சியை வெற்றிகரமாக நடத்தினார். தனது உடல் எடையைக் குறைக்கவும், தனது உணவு முறையைச் சரிசெய்யவும் உடற்பயிற்சி பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணருடன் அவர் ஆலோசனை பெற்று பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
நான்கு நாட்கள் இடைவிடாமல் சமைக்கும் போது அவர் தூங்கவோ உட்காரவோ அனுமதிக்கப்படவில்லை. சமைக்கும் போது செயற்கையாக தன் ஆற்றலையும் உடல் வலிமையையும் அதிகரிக்கக் காபி, ஊக்கமருந்துகள் அல்லது ஆற்றல் பானங்கள் எதுவும் எடுக்க அனுமதிக்கப்படவில்லை. அவள் உணவு சாப்பிடவும், தண்ணீர் அல்லது பழச்சாறு குடிக்கவும், குளுக்கோஸ் எடுக்கவும் அனுமதிக்கப்பட்டார்.







