தமிழகத்தில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்புகளில் பயிற்சி பெறவும், சிரியா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைத்துச் சென்று ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் தயாரிக்கவும் பயன்படுத்தவும் பயிற்சி கொடுத்து தமிழம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அசம்பாவித சம்பவங்களை நிகழ்த்த தீவிரவாத அமைப்புகள் முழுமூச்சுடன் ஈடுபட்டுள்ளது.
இது குறித்த தகவலின் பேரில் மத்திய உளவுத்துறை தகவல்களை சேகரித்து நேரடியாக சேலம் ஈரோடு மற்றும் ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி 4 பேரை கைது செய்து தமிழ்நாடு காவல்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெங்ளூர் திலக் நகர் காவல் எல்லைக்குட்பட்ட, அடுக்குமாடி குடியிருப்பில் அக்தர் உசேன் லஸ்க்கர் என்பரது வீட்டில் பெங்களூர் மத்திய குற்றபிரிவு போலீசாரும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை நடத்தினர். இதில் அக்தர் உசேன் லஸ்க்கர் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் நேரடி தொடர்பில் இருந்ததர்கான ஆதாரங்களை கைப்பற்றினர்.
இதையடுத்து உசேனை கைது செய்து, தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அக்தர் உசேன் பயன்படுத்திய செல்போனில் அல்கொய்தா, அமைப்பின் தீவிரவாதிகளிடம் பல முறை தொடர்பு கொண்டு பேசியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர் அக்தர் உசேன் சேலம் எருமாபாளையம் பகுதியில், இயங்கி வரும் தனியார் கார்மென்ஸ் ஊழியர் அப்துல் அலி ஜுபா மற்றும், ஈரோடு அடுத்த மானிக்கம் பாளையத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆசிப், யாசின், மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மீர் அனாஸ் அலி என்பவரிடமும் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நேரடியாக களத்தில் இறங்கி அப்துல் அலி ஜுபா, ஆசிப், யாசின், மற்றும் திருப்பத்தூரை சேர்ந்த மீர் அனாசலி ஆகியோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தீவிரவாதிகள் இந்தியா முழுவதும் பெரிய அளவிலான சதித்திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக செயல்படத் தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக இந்தியா முழுவதும் உள்ள மாவட்டங்களில் காஷ்மீர் புதுடெல்லி மும்பை பெங்களூர் தமிழகம் உ ள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் தீவிரவாத குழுக்களில் செயல்படுவோர் மற்றும் தீவிரவாத கொள்ளை உடையோர், பட்டதாரி இளைஞர்கள் ஆகியோருக்கு ஆசை வார்த்தைகள் கூறியும் தங்கள் மதத்திற்கு எதிராக செயல்படுவேரை கொலை செய்ய வேண்டும் என அவர்களை மனமாற்றம் செய்து தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாற்கான மூளை சலவை செய்யத் தொடங்கிவிட்டனர். வெளி மாநிலங்களில் இருந்து தமிகத்தில் பல்வேறு நிறுவனங்கள் ஹோட்டல்களில் பணியாற்றும் வடமாநில ஊழியர்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகளை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாகவும் மாதம் தோறும் பண உதவி செய்வதாகவும் பேசி பலரையும் தன்வயப்படுத்தியுள்ளனர்.
இவர்களை சுற்றுலா விசாவில் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்று ஆயுத பயிற்சி மற்றும் வெடி குண்டுகளை கையாளும் பயிற்சி கொடுத்து திருப்பு அனுப்பியுள்ளனர், தாங்கள் கூறும் போது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய அளவில் வெடிகுண்டு தாக்குதல்கள் காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் மற்றும் புராதன இடங்கள் மீது தாக்குதல், இந்து மத தலைவர்களை படுகொலை செய்வது உள்ளிட்ட சதிச் செயல்களில் ஈடுபட உத்தரவிட்டுள்ளனர்.
தீவிரவாத ஆதரவாளர்கள் வாட்ஸ் அப், டெலிகிராம் சிக்னல், உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்கள் மூலம் வெளிநாட்டு தீவிரவாத கும்பல் மற்றும் தலைவர்களுடன் போனில் பல முறை பேசியிருப்பதும் தகவல்களை பறிமாற்றம் செய்திருப்பதும் மத்திய உளவுதுறை இடை மறித்து கேட்டது. இதைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறை இந்தியா முழுவதும் 40 இடங்களில் நேரடியாகவே உள்ளூர் போலீசாருக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் அதிரடி சோதனை நடத்தி தீவிரவாத ஆதரவாளர்களை கைது செய்ய தொடங்கியுள்ளனர். இவர்களிடம் கைப்பற்றப்பட்ட செல்போன்கள், பெண்டிரைவ்கள், லேப்டாப்புகள் மூலம் பல இளைஞர்களை திசைத் திருப்பி தீவிரவாத குழுக்களில் இணைத்திருப்பதையும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆதாரங்களுடன் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான சதிச் செயல்கள் வெடிகுண்டு வீச்சு உள்ளிட்ட அசாம்பவித சம்பவங்கள் நடத்த திட்டமிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள, வெளிநாட்டு குற்றவாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாமில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய போது ரூ. 33 லட்சம் ரொக்க பணம், 58 செல்போன்கள், மின்னனு சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர். இவற்றையும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஹவாலா மற்றும தொண்டு நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டில் இருந்து ஏரளமான நிதி வந்து கொண்டிருப்பதையும் உறுதி படுத்தியுள்ளனர்.
இந்த முகாமில் 183 குற்றவாளிகள் தங்கவைக்கப்பட்டிருந்த போதும் ஒரே ஒரு பெண் ஏட்டு மட்டும்தான் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார் என்ற தகலும் மத்திய உளவுத்துறை அதிகாரிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு உளவுத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என அறிக்கை கொடுத்துள்ளனர். தீவிரவாதிகளின் மற்றொரு கூடாரமாக தமிழ்நாடு சிறைசாலைகள் மாறி வருவதையும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தீவிரவாத ஆதரவாளர்கள், சிறையில் இருந்தபடியே தமிழ்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் உள்ளவர்களையும் தொடர்பு கொண்டு தீவிரவாத குழுக்களுக்கு நிதித் திரட்டுவதும் தமிழ்நாட்டில் உள்ள தொழில் அதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து பல கோடி நிதி வசூலித்து வருவதையும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே மத்திய சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டுள்ள தீவிரவாதிகள் மற்றும் தீவிரவாத குழு ஆதரவாளர்களை கண்காணிக்கும் படி தமிழக டிஜிபிக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். தமிழ்நாட்டில் தீவிரவாத ஆதரவாளர்கள், நிதி திரட்டவும், ஆட்களை சேர்க்கவும் தீவிரமாக செயல்பட்டு வருவது மத்திய உள்துறையை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை இப்பிரச்னையை உணர்ந்து உளவுத்துறை மூலமாக தீவிர கண்காணிப்பை பலப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால், பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்களை சந்திக்க நேரிடும் எனவும், மத்திய உளவுத்துறை அதிகாரிகள் என்.ஐ.ஏ அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்
சிவ.செல்லையா








