அஜித் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்

திடீரென படக்குழு சர்பிரைஸாக ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகும். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித்…

திடீரென படக்குழு சர்பிரைஸாக ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகும்.

நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு எச் வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்திற்குத் தற்காலிகமாக ஏகே 61 என்று பெயரிடப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. 70% படப்பிடிப்பு முடிந்த நிலையிலும் படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டும் வராத நிலையில் நேற்று இந்த படத்தின் முதல் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. துணிவு எனப் பெயரிடப்பட்ட இப்படத்தின் போஸ்டரில் துப்பாக்கியுடன் அஜீத் இடம்பெறும் ஸ்டைலான புகைப்படமும் No Guts No Glory என்ற வாசகமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஹீஸ்ட் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுவரும் துணிவு படத்தில் அஜித்துடன் மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வீரா, சமுத்திரக்கனி, ஜான் கொக்கன் மற்றும் தெலுங்கு நடிகர் அஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். போனி கா பூர்ஸ் பேவியூ ப்ராஜெக்ட்ஸ் LLP மற்றும் Zee Studi os இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவும், விஜய் வேலுக்குட்டி படத்தொகுப்பு செய்கின்றனர். எச் வினோத் இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசையமைக்கிறார்.

வரும் 2023 குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று துவங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. சுமார் 25 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷெட்யூலில் சில முக்கிய அதிரடி காட்சிகளைப் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் இன்றும் மூன்றாவது போஸ்டர் நாளை வெளியாகும் எனக் கூறப்படுகிறது. திடீரென படக்குழு சர்பிரைஸாக ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் இதுபோல் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.