”Next Stop: The Moon” – நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 3…

சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை…

சந்திரயான்-3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக 615 கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திரயான்-3 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த 14-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்று வட்டப்பாதையில் இது அன்றைய தினமே நிலைநிறுத்தப்பட்ட நிலையில், படிப்படியாக விண்கலம் அடுத்தடுத்த சுற்றுப்பாதைகளுக்கு உயர்த்தப்படுகிறது.

சந்திரயான் 3 விண்கலத்தை புவி சுற்றுவட்டப்பாதையின் 5-வது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

மேலும் விண்கலம் 127609 km x 236 km சுற்றுவட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், கண்காணிப்புக்கு பிறகு இந்த சாதனை குறித்து பகிரப்படும் எனவும் இஸ்ரோ தெரிவித்தது.

https://twitter.com/isro/status/1686089881875775488?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1686089881875775488%7Ctwgr%5E889b6ca36e3a35b40e782ea10d5f8fc23e7708eb%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fdinasuvadu.com%2Fchandrayaan-3-is-moving-away-from-earths-orbital-path-towards-the-moon%2F

இந்நிலையில், விண்கலம் 5 அடுக்கு கொண்ட புவி வட்டத்தின் சுற்றுப் பாதையை நிறைவு செய்துவிட்டு நள்ளிரவு 12 முதல் 1 மணி இடையே நிலவின் நீள்வட்டப் பாதையை நோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளது. இதனை அடுத்து சந்திரயான்-3 ஆகஸ்ட் 5, 2023இல் சந்திர சுற்றுப்பாதை முழுதாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட முயற்சிகள் வெற்றிபெறும்பட்சத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான்-3 லேண்டரை மென்மையாக தரையிறக்க உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.