ரஜினியுடன் படம் பண்ணுவது குறித்து தயாரிப்பு நிறுவனம் தரப்பில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படும். என தெரிவித்தார் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ‘ஜெயிலர்’, தன் மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் ‘லால் சலாம்’ படங்களை முடித்திருக்கும் ரஜினிகாந்த், சில நாட்களுக்கு முன் மாலத்தீவுக்குச் சென்றார். அங்கு ஓய்வில் இருக்கும் அவர் அடுத்து ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில், ரஜினி- லேகேஷ் கனகராஜ் இணையும் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது. #ரஜினி171 படம் அடுத்தாண்டு பிப்வரி மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மாலத்தீவு சென்றுள்ள ரஜினி திரும்பியதும், டிஜே ஞானவேல் இயக்கத்தில் #ரஜினி170 வது படத்தில் நடிக்கிறார். எனவும், இதற்கான இடைவேளையில், லியோ பட ரிலீஸ் முடிந்த பின், ரஜினி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியாகிறது.







