நியூஸ் 7 தமிழ் சார்பில் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற இரண்டு நாள் கண்காட்சியில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
நியூஸ் 7 தமிழ் சார்பாக மதுரை காந்தி மியூசியத்தில் உயர் கல்விக்கு வழிகாட்டு மாபெரும் இரண்டு நாள் கல்வி கண்காட்சியானது நேற்று பாரம்பரிய கலை நிகழ்ச்சியுடன் மிகச் சிறப்பாக துவங்கியது. இந்த கண்காட்சியை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மற்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த கல்வி கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவெனில் 50க்கும் மேற்பட்ட பிரபல கல்லூரிகளின் ஸ்டால்கள், வங்கியில் கல்வி கடன் பெற ஆலோசனை, +2 தேர்வு முடிவதற்கு முன்பே கல்வி உதவிக்கு பதிவு செய்வது, +2 தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு நிச்சய கல்வி உதவித் தொகை, மேற்படிப்பு குறித்து தன்னம்பிக்கை பேச்சாளர்களுடன் கலந்துரையாடல் என அனைத்து அம்சங்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வகையில் இந்த கல்வி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள் : மகளிர் டி20 உலகக் கோப்பை – 6வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்!
முதல் நாளான நேற்று உயர்கல்வி ஆலோசகர் கலைமணி கருணாநிதி மற்றும் கல்வி உளவியலாளர் முனைவர் சரண்யா ஜெய்குமார் ஆகியோர் மாணவர்களிடையே உயர்கல்வி குறித்து சிறப்புரையாற்றினர். இந்த கருத்தரங்குகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்த கண்காட்சியானது இன்று காலை 10 மணி அளவில் துவங்கியது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மாணவர்களின் வருகை இன்று அதிகரித்துக் காணப்பட்டது. இரண்டாவது நாள் கண்காட்சியில் வெளிநாட்டு உயர்கல்வி ஆலோசகர் சிவப்பிரகாசம், கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் பூமிநாதன் உரையாற்றினர்.
மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களும் இன்று வருகை தந்து தங்களது குழந்தைகளின் உயர்கல்வி குறித்த சந்தேகங்களை கேட்டறிந்தனர். மாணவர்கள் கல்வி கடன் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதுடன், வங்கிகள் சார்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.
கல்விக் கண்காட்சியில் பங்கேற்ற மாணவர்கள் தங்களுக்கு, நியூஸ்7 தமிழ் ஏற்பாடு செய்த இந்த கல்வி கண்காட்சி ஒரு வரப்பிரசாதமாக அமைந்து என்று தெரிவித்தனர். கல்வி நிறுவனங்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற குழப்பத்தில் இருந்த நிலையில், இந்த கல்வி கண்காட்சி தங்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். மேலும், வங்கிகள் மூலம் கல்விக்கடன் வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறினர்.
கடந்த ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற மாபெரும் கல்வி கண்காட்சி, மிகப்பெரிய வெற்றியை தந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற கல்வி கண்காட்சியும் வெற்றிகரமானதாக அமைந்தது. இறுதியாக கல்வி கண்காட்சியில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களுக்கு நியூஸ்7 தமிழ் சார்பாக கேடயம் வழங்கப்பட்டது.