உதயமானது நியூஸ்7 தமிழ் ஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனல்!!

நியூஸ் 7 தமிழ் ப்ரைம், நியூஸ் 7 தமிழ் பக்தி, நியூஸ் 7 தமிழ் அக்ரி,  நியூஸ் 7 தமிழ் ஹெல்த் உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் அளித்த பேராதரவைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்காக…

நியூஸ் 7 தமிழ் ப்ரைம், நியூஸ் 7 தமிழ் பக்தி, நியூஸ் 7 தமிழ் அக்ரி,  நியூஸ் 7 தமிழ் ஹெல்த் உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளுக்கு பொதுமக்கள் அளித்த பேராதரவைத் தொடர்ந்து விளையாட்டு வீரர்களுக்காக நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் என்ற புதிய யூடியூப் சேனல் உதயமானது.

நியூஸ் 7 தமிழ் ப்ரைம் தொலைக்காட்சி செய்திகளை உடனுக்கு உடனும், சமூக பொறுப்புடன் விரைவாக வழங்கி வருகிறது. நியூஸ்7 தமிழ் ப்ரைம் தொலைக்காட்சி ஆன்மீக நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக நியூஸ்7 தமிழ் பக்தி, வேளாண்மையில் ஏற்படும் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல செய்திகளை வழங்க நியூஸ்7 தமிழ் அக்ரி, மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நியூஸ்7 தமிழ் ஹெல்த் உள்ளிட்ட பல யூடியூப் சேனல்களை தொடங்கி மக்களின் பேராதரவை பெற்றது.

இதையடுத்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் அடுத்த புதிய முயற்சியாக விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், அது குறித்த பல தகவல்களை கொடுப்பதற்காகவும், நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் யூடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் அமைந்துள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இதன் தொடக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக  தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், நியூஸ் 7 தமிழ் மேலாண் இயக்குநர் வை.சுப்பிரமணியன், நியூஸ் 7 தமிழ் நிர்வாக ஆசிரியர் தியாக செம்மல், துணை ஆசிரியர் சுகிதா சாரங்கராஜ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சிறப்பு விருந்தினர், சௌமியா அன்புமணி நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ் சேனலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதற்கான இலட்சினையை  நியூஸ்7 தமிழ் மேலாண் இயக்குனர் வை.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் நோக்கில் இந்த யூடியூப் சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. ஃபிஃபா போட்டியின் போது இரவில் கண் விழித்து போட்டியை பார்த்து ரசித்தோம். நான் மருத்துவராக இல்லாமல் இருந்து இருந்தால் தமிழ்நாட்டை முன்னிருத்தி விளையாட்டு வீரராக இருந்து இருப்பேன் என்று என் கணவர் அடிக்கடி கூறுவார் என்று பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.