நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | கேரள, தமிழக எல்லையில் மீண்டும் செயல்பட தொடங்கிய #NipahVirus சோதனை மையம்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழக, கேரள எல்லையில் உள்ள நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையம், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால்…

News7 Tamil news echo - #NipahVirus testing center resumed on Kerala, Tamil Nadu border!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழக, கேரள எல்லையில் உள்ள நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையம், மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் 24 வயது இளைஞரும் உயிரிழந்தார். இதையடுத்து மலப்புரம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை உடனடியாக மேற்கொண்டது.

தொடர்ந்து கேரளாவின் அண்டை மாநிலங்களிலும், நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையத்தை அந்தந்த மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லையில் உள்ள புளியரை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையமானது கடந்த சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. இது தொடர்பாக நீயூஸ் 7 தமிழ் செய்தி சேனலில் நேற்று செய்திகள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில் அதன் எதிரொலியாக இன்று புளியரைப் பகுதியில் செயல்படாமல் இருந்த, நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு சோதனை சாவடி மையம் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.