நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி; அமைச்சர்கள் ஆய்வு

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எதிரொலியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீடீரென அமைச்சர்க்ள ஆய்வு மேற்கொண்டனர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா, மாநில…

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் கேள்வி எதிரொலியாக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீடீரென அமைச்சர்க்ள ஆய்வு மேற்கொண்டனர். 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியில் மத்திய
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூக் மண்டவியா, மாநில மக்கள்
நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம்,  சிறுபான்மை நலத்துறை
அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர்  ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது செய்தியாளர் சந்திப்பின் போது நியூஸ் 7 தமிழ் திண்டிவனம் செய்தியாளர்
கோகுல்ராஜ் மரக்காணம் அரசு மருத்துவமனை எப்போது தரம் உயர்த்தப்படும், கிழக்கு
கடற்கரை சாலையில் நிகழும் விபத்துகளில் படுகாயம் அடைபவர்கள் புதுச்சேரி
மருத்துவமனையை நாட வேண்டியுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

கேள்வியின் எதிரொலியாக மாநில அமைச்சர்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்
மா.சுப்ரமணியம் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்
மரக்காணம் அரசு பொது மருத்துவமனையை திடீரென ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மக்கள் நல்வாழ்வு துறை அரசு முதன்மை செயலாளர் பி செந்தில்குமார், மாவட்ட ஆட்சியர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆய்வு செய்த பின்பு கட்டங்கள் மற்றும் கருவிகள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் மோகன் நமது நியூஸ்7 தமிழ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.