நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மாற்றுத்திறனாளி இளைஞருக்கு உடனடியாக வழங்கப்பட்ட சான்றிதழ்

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுரையில் மின்சாரம் தாக்கி ஒற்றை காலை இழந்த இளைஞருக்கு உடனடியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது. மதுரையை சேர்ந்த இருளப்பன் என்பவர் 5 மாதங்களுக்கு முன்பு, தான் வேலை…

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியாக மதுரையில் மின்சாரம் தாக்கி ஒற்றை காலை இழந்த இளைஞருக்கு உடனடியாக மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கப்பட்டது.

மதுரையை சேர்ந்த இருளப்பன் என்பவர் 5 மாதங்களுக்கு முன்பு, தான் வேலை செய்த இடத்தில் மின்சாரம் தாக்கி ஒற்றை காலை இழந்தார். அவருக்கு இன்னும் முழுமையாக காயங்கள் ஆறாததால் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். 20 வயதாகும் இருளப்பன் தனக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். மின்சாரம் தாக்கி ஒற்றை காலை இழந்து காயங்கள் குணமாக நிலையில் சிகிச்சையில் இருந்த இருளப்பனை மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெற நேரில் வர வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதிகாரிகளின் உத்தரவை அடுத்து அவர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார். இது தொடர்பான செய்தி நியூஸ் 7 தமிழில் வெளியானது. இதையடுத்து இளைஞர் இருளப்பனுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு ஆகியவற்றை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் இன்று வழங்கினார்.

மேலும் இருளப்பனுக்கு செயற்கை கால் மற்றும் சுய தொழில் செய்ய கடனுதவி வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை பெற்றுக்கொண்ட இருளப்பன் நியூஸ் 7 தமிழுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.