சீனாவில் கியாஸ் பங்கில் எரிவாயு நிரப்பி விட்டு அதற்குரிய பணத்தை தூக்கி எறிந்து விட்டு செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு சொகுசு காரில் கியாஸ் பங்குக்கு ஒருவர் வருகிறார். உள்ளிருந்தபடியே எரிவாயு நிரப்பும்படி அந்த பெண் ஊழியரிடம் கூறுகிறார். பிறகு அந்தப் பெண் ஊழியர் எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபடுகிறார். எரிவாயு நிரப்பிய அதற்குரிய பணத்தை வாங்குவதற்கு அந்த பெண் ஊழியர் கார் உரிமையாளர் அருகே செல்கிறார்.
அப்போது அந்த கார் உரிமையாளார் பணத்தை அந்த ஊழியர் கொடுக்காமல் தூக்கி கீழே வீசுகிறார். இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கண்களில் கண்ணீருடன் கீழே சிதறிக் கிடந்த பணத்தை எடுக்கிறார். இவ்வாறு அந்த வீடியோவில் உள்ளது. கார் உரிமையாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது.
முக்கியமாக , “பணத்தை வைத்திருப்பதன் காரணமாக நீங்கள் நல்ல பண்புள்ளவராக இருக்கமுடியாது”, “ஆசிய நாடுகளில் இதுபோன்று நடப்பது மிகவும் வருந்ததக்கது” என்பது போன்ற கருத்துகள் இணையத்தில் பதியப்பட்டு வருகின்றன.







