வரதட்சணை கொடுமை குறித்து நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட கார்ட்டூனை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் வரதட்சணை கொடுமையால் ஒரு பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக அவலங்களை தொடர்ந்து விமர்சித்து வரும், நியூஸ் 7 தமிழ், இந்த சம்பவம் குறித்து கார்ட்டூன் வெளியிட்டிருந்தது.
பல நூற்றாண்டுகள் கடந்தாலும், பெண்கள் கல்வியில் முன்னேற்றம் கண்டாலும், வரதட்சணை பெறும் அவலம் இன்றும் தீர்ந்தபாடில்லை என்பதை விளக்கும் விதமாக அந்த கார்ட்டூன் உருவாக்கப்பட்டிருந்தது. இதனை, பல்வேறு தரப்பினர் சமூக வலைதங்களில் பகிர்ந்து தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த கார்ட்டூனை பகிர்ந்த, திமுக எம்.பி. கனிமொழி, ’’’என்று தணியும் இந்த சுதந்திர தாகம்” என்ற பாரதியாரின் பாடலை மேற்கோள்காட்டி பதிவிட்டுள்ளார். இந்த பதிவை 1,500-க்கும் மேற்பட்டவாகள் லைக் செய்துள்ளனர், 300-க்கும் மேற்பட்டவர்கள் ரீட்விட் செய்துள்ளனர்.







