ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், ( European Space Agency ) உலகத்திலே முதல்முறையாக மாற்றுத்திறனாளி விண்வெளி வீரரை பணியமர்த்த உள்ளது.
உலகம் பல வளர்ச்சியை கண்டாலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், பெண்கள் ஆகியோர் எப்போதும் இரண்டாம் பச்சமாகவே பார்க்கபடுகிறர்கள். இதில் மாற்றுத்திறனாளிகள் குறிப்பிட்ட துறையில் மட்டுமே பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில் விண்வெளி வீரராக மாற்றுத்திறனாளிகளை நியமிக்க உள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பை இஎஸ்ஏ-வின் தலைவர் ஜோசப் அஸ்ச்பச்சர் (Josef Aschbacher ) வெளியிட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
’விண்வெளி அனைவருக்குமானது’ என்பதே இந்த முயற்சியின் நோக்கம் ஆகும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.