நிதித்துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், நிதித்துறை சார்பில், தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 6 நிறுவனங்களுக்கு முதலீட்டு அனுமதி கடிதங்களை வழங்கியதுடன், தமிழ்நாடு மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள Companies Compliances and Financials Monitoring System http://www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தையும் தொடங்கி வைத்தார்.
https://twitter.com/CMOTamilnadu/status/1618861578002272256
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாடு பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் புத்தொழில் நிதித் திட்டத்தின் கீழ், பங்கு முதலீடு செய்வதற்காக 5 புத்தொழில் நிறுவனங்களில் ரூ 7.50 கோடிக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.







