நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் சூர்யா 44-ன் புதிய அப்டேட்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படத்தின் புதிய அப்டேட் இன்று நள்ளிரவு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யாவின் திரை வரலாற்றில் அதிக பொருட்செலவில் உருவாகும் படமாக ‘கங்குவா’ அமைந்துள்ளது. கங்குவா படத்திற்கு பின் சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் நடிக்கவில்லை. இதனையடுத்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பதாக இருந்தது.

ஆனால் விடுதலை 2 படத்தின் வேலைகளால் அந்த படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை (ஜூலை 23) முன்னிட்டு இன்று நள்ளிரவு 12.12 மணிக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என சூர்யா-44 படக்குழு அறிவித்துள்ளது. இது, இப்படத்தின் பெயர் அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.