பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் அமல்- அண்ணா பல்கலை.

பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தியுள்ளது.  பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக…

பொறியியல் படிப்பிற்காக புதிய பாடத்திட்டங்களை நடப்பாண்டு முதல் அண்ணா பல்கலைகழகம் அமல்படுத்தியுள்ளது. 

பொறியியல் படிப்புக்கு புதிய பாடத்தை அறிமுகம் செய்ய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே முடிவு செய்திருந்தது. முதற்கட்டமாக முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்படவுள்ளதாக அறிவித்திருந்தது.

பாடத்திட்டத்தின் பெரும்பகுதி தொழில்துறையினர் பங்களிப்பு இடம்பெறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணா பல்கலைக்கழகம் விளக்கமளித்திருந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலேயே புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது.

அதன்படி, காலத்துக்கேற்ப மாற்றி வடிவமைக்கப்பட்டுள்ள புதிய பொறியியல் பாடத்திட்டம் கடந்த 18ம் தேதி வெளியிடப்பட்டது. வேலைவாய்ப்பு, தனித்திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் 20 ஆண்டுகளுக்குப் பின் பொறியியல் பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளதாகவும், தொழிற் தேவைக்கேற்ப மாணவர்களை தயார்படுத்துதல், ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவித்தல், சராசரி மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணருதல், தொழில்முனைவோராக உருவாக்குதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடத்திட்டம் மாற்றம் செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய பாடத்திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, முதல் 3 செமஸ்டர்களுக்கு, தமிழர் மரபு, அறிவியல் தமிழ், Professional Development, English Lab, Communication lab / Foreign Language ஆகிய 5 புதிய பாடங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக முதல் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. 3-ம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.