வங்கிக் கொள்ளை வழக்கு-காவல் துறையினருக்கு சான்றிதழ் வழங்கிய டிஜிபி

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் மீட்ட காவலர்களுக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும்…

சென்னை அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில் விரைந்து குற்றவாளிகளை கைது செய்து அனைத்து தங்க நகைகளையும் மீட்ட காவலர்களுக்கு தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலும் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.

கடந்த 13 தேதி மதியம் 02.30 மணியளவில் அரும்பாக்கம் காவல் நிலைய
எல்லைக்குட்பட்ட ரசாக் கார்டன் சாலையில் இயங்கி வந்த வங்கியில் ஊழியர்களை
கத்தியை காட்டி மிரட்டி வங்கி ஊழியரிடம் இருந்த Strong Room சாவியை பறித்து
கொண்டு வங்கி ஊழியர்களை ஓய்வு அறையில் அடைத்து விட்டு வங்கியின் Strong Room
பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த வாடிக்கையாளர்களின் சுமார் ரூ.15 கோடி
மதிப்பிலான 31.7 கிலோ எடை கொண்ட தங்க நகை ஆபரணங்களை கொள்ளையடித்துக் கொண்டு, வங்கி ஊழியர்களில் இருவரை Strong Room-ல் வைத்து பூட்டி விட்டு அதன் சாவியுடன் கொள்ளையர்கள் தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது.

இதுகுறித்து வங்கி மேலாளர் சுரேஷ் அளித்த புகாரின் பேரில் அரும்பாக்கம்
போலீசார் வழக்கு பதிவு செய்து சென்னை காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்
பேரில் சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு தலைமையில் 11 தனிப்படை
அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் குற்றவாளிகள் சந்தோஷ், பாலாஜி, முருகன், சூர்ய பிரகாஷ், செந்தில்குமரன், அமல்ராஜ்.  ஸ்ரீவட்சன் (எ) வட்சன் ஆகிய 7 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றவாளிகளிடமிருந்து 31.7 கிலோ தங்க நகைகள். 3 கார்கள் மற்றும் 2 இருசக்கர
வாகனங்கள், 1 நகை உருக்கும் இயந்திரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்து தங்க நகைகளை மீட்ட சென்னை
வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அன்பு, இணை ஆணையாளர் இராஜேஸ்வரி,துணை ஆணையர் விஜயகுமார்,11 காவல் ஆய்வாளர்கள், 9 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 19 காவல்
ஆளிநர்கள் என மொத்தம் 48 காவல் அதிகாரிகளை சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.

தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு, இந்த வழக்கில் பங்காற்றிய அதிகாரிகளை இன்று நேரில் வரவழைத்து சிறப்பாக பணிபுரிந்தமைக்காக பாரட்டி சான்றிதழ்கள் வழங்கி வழ்த்துகளை தெரிவித்தார்.

இதே போல் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளய்ரகளை பிடித்து தங்க நகைகளை மீட்ட அனைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் , காவலர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சான்றிதழ்கள வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.