தமிழகம் செய்திகள் வணிகம்

புதிய கடை திறப்பு; கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்ட நிர்வாகம்

நெல்லையில் புதிதாக திறக்கப்பட உள்ள வீட்டு உபயோகப் பொருள் கடையில் ஓவியம் வரைந்து கொடுக்கும் முதல் 300 நபர்களுக்கு பரிசு வழங்கப்படும்  என்று அறிவித்ததால் கடை முன் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் நிறுவனத்தின் சார்பில் வீட்டு உபயோகப் பொருள் கடை ஒன்று நாளை திறக்கப்பட உள்ளது. இதனையொட்டி கடை நிர்வாகம்  சார்பில் விளம்பரத்துடன் கூடிய ஓவியம் வரையும் போட்டி நடத்ததுவதாக துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதில் முதலில் வரும் 300 நபர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று அறிவித்ததை தொடர்ந்து, இன்று காலை முதல், கடை முன்புஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஓவியத்தை கொடுப்பதற்காக கை குழந்தைகளுடன் நீண்ட வரிசையில் பெண்கள் உட்பட பலர் காத்திருந்தனர். மேலும் போலீசார் வந்து கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மு.க.ஸ்டாலின் தலைமையில் 100 நாட்கள்; அரசு மேற்கொண்ட திட்டங்கள்

G SaravanaKumar

அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முன் இருந்த நிலை என்ன?…யாருக்கு என்ன அதிகாரம்?…

Web Editor

வணக்கம், எனக்கூறி தனது உரையைத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி

Arivazhagan Chinnasamy