ரோபோக்களை வேலையை விட்டு தூக்கிய கூகுள் – சுந்தர் பிச்சை எடுத்த அதிரடி முடிவு

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் அலுவலக உணவு விடுதிகளை சுத்தம் செய்த 100 ரோபோக்கள் உட்பட 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை…

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் அலுவலக உணவு விடுதிகளை சுத்தம் செய்த 100 ரோபோக்கள் உட்பட 12,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆல்பாபெட்டின் X ஆய்வகங்களில் சோதனை ஆராய்ச்சிக்காக ‘எவ்ரிடே ரோபோட்ஸ்’ திட்டத்தை நிறுத்திவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ப்பரேட் கேன்டீன்களை சுத்தம் செய்ய உதவும் ஒரு கையுடன் நூறு சக்கர ரோபோக்களை இந்த திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த ப்ரோடோடைப் ரோபோக்கள் பல பல கூகுள் அலுவலகத்தில் முக்கியமான பணிகளைச் செய்து வருகின்றன.

இந்த ரோபோக்கள் கவுண்டர்களை துடைத்து, குப்பையிலிருந்து மறுசுழற்சி செய்யக்கூடியவற்றை வரிசைப்படுத்துகின்றன.

கடந்த பல ஆண்டுகளாக, Alphabet கல்விக்கான ஒரு விரிவான வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்பில் கடினமாக உழைத்து வருகிறது. இது கணினி மற்றும் நிஜ உலகங்களுக்கும் உள்ள பரிமாற்றத்தை எளிதாக்குகிறது.

இந்த திட்டத்தின் செயல்பாட்டில், பல்வேறு இயந்திரக் கற்றல் அணுகுமுறைகளைப் பயன்படுத்தி, ரோபோக்கள் படிப்படியாக தங்கள் சூழலைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்து, அன்றாட பணிகளைச் செய்வதற்கான திறனை மேம்படுத்தின.

ஆனால் கூகுள் தனது நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில், பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகவே அலுவலக உணவு விடுதிகளை சுத்தம் செய்த 100 ரோபோக்கள் பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.