தங்க நகை விற்பனையில் புதிய விதிமுறை – ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல்!

தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களின் விற்பனையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. 4 அல்லது 6 இலக்கங்கள் இல்லாமல் ஹாஸ்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளோ,…

தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களின் விற்பனையில் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது.

4 அல்லது 6 இலக்கங்கள் இல்லாமல் ஹாஸ்மார்க் செய்யப்பட்ட தங்க நகைகளோ, கலைப் பொருள்களோ வரும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு விற்பனை செய்ய அனுமதி இல்லை என மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: வள்ளலார் கோயிலில் புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்த ஜப்பானியர்கள்!

உணவு மற்றும் நுகா்வோா் நலத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தலைமையில் இந்திய தர நிா்ணய ஆணைய ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குறு தொழில் தயாரிப்புகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தரச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணங்களில் 80 சதவீதம் வரை சலுகைகளை அறிவிப்பது, விற்பனையாகும் தங்க நகைகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவது,  ஹால்மாா்க் அடையாள எண் கொண்ட நகைகளின் விற்பனையை மட்டும் அனுமதிப்பது என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, செய்தியாளா்களைச் சந்தித்த நுகா்வோா் நலத் துறை கூடுதல் செயலாளா் நிதி காரே கூறுகையில், கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் தங்க நகைகளின் தரத்தை உறுதிப்படுத்த ஹால்மாா்க் அடையாள எண் பதிக்கும் திட்டம்  நடைமுறையில் இருக்கிறது. 200-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள இந்த நடைமுறை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே, தனித்துவமான 4 அல்லது 6 இலக்க ‘ஹால்மாா்க்’ அடையாள எண்கள் பதிக்காத தங்க நகைகள் மற்றும் தங்க கலைப் பொருள்களை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுகிறது என்றாா்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.