தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு திமுகவில் சொத்து பாதுகாப்பு குழுச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் உட்கட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளை திமுக தலைமை நியமித்து வருகிறது. புதிய பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அந்த பொறுப்புக்குரியவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அக்கட்சியில் செய்தித்தொடர்புத் தலைவர் பொறுப்பு உருவாக்கப்பட்டு அதற்கு டி கே எஸ் இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தொடர்பு துணைத்தலைவர்களாக அரசகுமார் மற்றும் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்ஷினி நியமிக்கப்பட்டுள்ளனர். செய்தித் தொடர்பு செயலாளராக கான்ஸ்டண்டைன் ரவீந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்திட்டத் திருத்தக்குழுச் செயலாளராக கிரிராஜன், விவசாய அணித்தலைவராக என். கே.கே பெரியசாமி, செயலாளராக ஏ.கே.எஸ் விஜயன் நியமிக்கப்பட்டுள்ளனர். பணிச்சுமை காரணமாக திமுக தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்